top of page

வேள்பாரி- 2:

Updated: Feb 14


நாடென்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம், அதிகாரம் உயிர் பெறாத இடத்தில அன்பு மட்டுமே தழைத்திருக்கும்

இப்படி அன்பு மட்டுமே தழைத்து, அதிகாரம் என்ற வார்த்தை கூட பயன்படாத நிலம் தான் பறம்பு . இப்பறம்பு நாட்டின் தலைவன் தான் பாரி.


எல்லா மன்னர்களிடமும் பரிசல் பெற்ற பாணர்கள் பாரியிடம்தான் கருணையைப் பெற்றனர்.

மூவேந்தர்களின் ஆதரவை பெற்று அவர்களுக்கு அறிவுரை வழங்கும் உரிமை, கபிலர் போன்ற சிலருக்கு மட்டுமே உண்டு.


பாரியைப்பற்றி பாணர்கள் மீண்டும் மீண்டும் பாடிய போது கபிலருக்கு வியப்பைவிட ஐயமே வலுப்பெற்றது. எனவே அவனைக்கான பறம்பு நாட்டிற்கே செல்கிறார் பெரும்புலவர் கபிலர்.

அங்கு அவர் காணும் யாவும் அவர் இது வரை கண்ட, கொண்ட எண்ணங்களை புரட்டிபோடுமளவு, இயல்பின் வடிவமாய், பாவனைகள் அல்லாதவையாய் திகழ்கின்றன.


நீலன், கடலை நான் கண்டதில்லை, எங்கள் பாரியின் அன்பை விடவா பரந்து விரிந்தது அந்த கடல் என்று கேட்கும்போது , தனியொரு வீரன் நாட்டை ஆளும் தலைவனை இவ்வளவு நேசிப்பதா !! என்று கபிலர் வியக்கிறார்.


அவர் பாரியையும் பறம்பையும் அதன் மக்களையும் மெதுவாக அறிந்து கொண்டிருக்கிறார்..


நாமும் மற்றொரு பதிவில் இன்னும் சற்று அறிவோம் ..



வேள்பாரியின் பதிவினை எழுதும்போது, நடந்த நிகழ்வினை அடுத்து , சில கருத்துக்களை இங்கே பதிவு செய்ய தோன்றியது.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


சிலரின் அருமை அவர்கள் மறைந்த பிறகே புரியும் ..


வேள்பாரியை வாசிக்கும்பொழுது இப்படி ஒரு மனிதன், ஆசிரியரின், இலட்சிய உலகின் நாயகனன்றி, முற்றிலும் உண்மையாய் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று தோன்றியதுண்டு..

அவன் ஆளும் நாட்டில் நாமும் வாழ்திருக்கக்கூடாதா என்று தோன்றியதுண்டு..


விஜயகாந்த் என்னும் மனிதனை, அவரின் மறைவிற்கு பின் அறியும்போது, பாரியின் குணங்களை ஒத்த ஒரு மனிதர் நம்முடன் வாழ்திருந்தார், ஆனால் அதை நம்மில் பெரும்பாலானோர் உணரவில்லை என்று, வேதனையே மிகுந்தது.


அந்த எதார்த்த மனிதர் சக மனிதனின் மேல் கொண்ட அன்பு, இரக்கம், அவரின் பண்பு, தெளிவு, வீரம் இவை யாவும்

பாரியை நினைவிற்கு கொண்டு வந்தன.


இன்றும் பாரியின் புகழை உலகமும், அவன் மக்களின் வழி தோன்றல்களும், இப்படைப்பின் மூலம் நாமும் எவ்வாறு கொண்டாடுகிறோமோ, அவ்வழியே இவரின் வாழ்வும், போற்றுதற்குரிய ஒரு சிறந்த வழிகாட்டி நமக்கு !!


16 views0 comments

Recent Posts

See All

வேள்பாரி - வாசகர்களுக்கு ஒரு குறிப்பு !!

சில காரணங்களால் பச்சை மலையை கை மட்டும் காட்டி விட்டு , பல மாதங்களாய் உங்களை அழைத்து செல்லாமல் விட்டு விட்டேன்.. மன்னிக்கவும் .. இப்போது பயணத்தை துவங்குவோமா !!

மேற்கோள்கள் - 7

கச்சிதமற்ற, முழுமையற்ற நிலையற்ற விஷயங்கள்தாம் அழகானவை. ஏனெனில் அவைதான் இயற்கையை அப்படியே பிரதிபலிக்கின்றன. ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ் . தமிழில் : PSV குமாரசாமி - இக்கிகய்

bottom of page