top of page

யானை டாக்டர் - ஜெயமோகன்

  • lakshmimandaleenag
  • May 29, 2021
  • 1 min read

Updated: Aug 31, 2021

-- "அறம்" என்னும் சிறுகதை தொகுப்பில் இருந்து .


வாழ்க்கையின் நிலை இல்லா தன்மையை மக்கள் உணரும் தருவாயில் மறுமுறை படிக்க விரும்பி படித்த கதை... அல்ல அல்ல நிஜம். . ஒரு மாமனிதனின் வாழக்கையை ஒட்டி எழுதியது..


என்ன ஒரு மனிதர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, காட்டிலே இருந்து கொண்டு இயற்கையையோடு இயைந்து, மனிதர்களின் மாய உலகை உணர்ந்து, பேராண்மை கொண்ட காட்டில் விலங்குகளை நேசிக்கும் மாமனிதர்.


வனத்துறை அதிகாரி ஒருவருக்கும் "டாக்டர் கே"வுக்குமான பழக்கம் மற்றும் உரையாடல்களின் ஊடாய் நம்மை இருவருமே வியப்பில் ஆழ்த்துகிறார்கள்.

யானை டாக்டர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் டாக்டர், அவருக்கு உயிர்களின் மேலே உள்ள அக்கறை , யானைகளுக்காக அவர் எடுத்து வரும் முயற்சிகள், அவரின் சேவை, இவை உலகறிய வேண்டும் என்று முயலும் வனத்துறை அதிகாரி.

இதை அறிந்து டாக்டர் கேட்கும் கேள்வி, "இந்த பட்டத்தை கொண்டு போய் வாசல்ல நிக்கற செல்வா (கும்கி யானை) கிட்ட காட்டி இனி என்கிட்டே மரியாதையா நடந்துக்கோன்னு சொல்லவா?".


மனிதன் எப்படி அதிகாரம் என்னும் மமதையில் திரிகிறான் என்றும், விலங்குகள் மற்றும் காட்டை பற்றிய அவரது புரிதலும், நம்மை சிந்திக்கச் செய்யும் .



ree

என்னை பாதித்த, டாக்டர் கே சொன்ன சில வரிகள் .. ஆழமானவை..


"பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்ப நின்னு கவனிச்சா போதும் , அப்படியே உதிர்ந்துடும்"


மனிதர்கள் வீசும் மது பாட்டில் உள்நுழைந்து திணறும் யானைக்கு சீழை அகற்றி சரி செய்து விட்டு யானைகளின் மகோன்னதத்தை சொல்வதாகட்டும்,

அடிபட்ட செந்நாய்க்கு மருந்து போடலாமா என்று கேக்கும் போது

''என்ன மருந்து ? நம்ம வழக்கமான ஆன்டி பையோட்டிக்ஸ் ஆ, காட்டு மிருங்கங்களோட ரெசிஸ்டன்ஸ் என்ன தெரியுமா ? இதெல்லாம் கொடுத்து பழகினா, அப்புறம் காட்டுக்குள்ளயும் 3 கிலோமீட்டருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் ஆரம்பிக்கணும்' என்று சொல்வதாகட்டும்..


" நாய் பத்தி என்ன நெனச்ச" என்று பைரனின் வரிகளை சுட்டுவதாகட்டும், மனிதனின் அழுக்கையும் மனிதனல்லாத மற்ற உயிர்களின் உன்னதத்தையும் அவற்றின் தூய்மையான உணர்வுகளையும் , செயற்கையான வாழ்க்கை ஓட்டத்தில் மனிதன் தொலைத்து விட்டு நடித்து கொண்டு இருக்கும் நிதர்சனத்தையும் சொல்வதாகட்டும் .. அவரை மேலும் தெரிந்து கொள்ள தூண்டுகிறார்..


என் பிறந்தநாளுக்கு என்ன வேண்டும் என்றும் கேட்டு இப்புத்தகத்தை பிரியமாய் பரிசளித்த என் தோழிகளுக்கு நன்றி.


வாழ்க்கையின் ஆழமான நிதர்சனங்களை சொல்லும் அறம் என்னும் பெட்டகத்தில்.. ஒரு நல்முத்து இந்த யானை டாக்டர்.



To buy from Amazon, please click the link



Recent Posts

See All
வேள்பாரி- 2:

நாடென்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம், அதிகாரம் உயிர் பெறாத இடத்தில அன்பு மட்டுமே தழைத்திருக்கும் இப்படி அன்பு மட்டுமே தழைத்து, அதிகாரம்...

 
 
 

2 Comments


dhayaanandhp
Jul 29, 2021

Excellent🙂🙂👍

Like

Lavanya venkatesan
Lavanya venkatesan
Jun 01, 2021

எங்கள் சிறிய பரிசு உங்கள் அற்புதமான வலைப்பதிவில் ஒரு பகுதியை எழுதச் செய்ததில் மகிழ்ச்சி 😇❤️

Like

©2021 by Reflections. Proudly created with Wix.com

bottom of page