ஏழாம் உலகம் - ஜெயமோகன்
- lakshmimandaleenag
- Jun 23, 2021
- 1 min read
Updated: Aug 31, 2021
பிறவியில் குறைபாடுள்ளோரையும் , அவர்களை வியாபாரத்தின் சரக்காக்கி பணம் பார்க்கும் உலகையும் பற்றிய விவரிப்பே இந்நூல்.புதினம் அல்லது நெடுங்கதை என்று எழுத மனம் வரவில்லை, முகத்தில் அறையாமல் எடுத்துரைத்த எதார்த்தம் அப்படி.
இந்நூலில் வரும் கதாபாத்திரங்களும், அவர்களின் எதார்த்த விவரிப்பும், அவர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி கதையை முன்னெடுத்து செல்கிறது. குமரித்தமிழின் பேச்சுவழக்கு, பழக்கமில்லாத வாசகர்களுக்கு முதலில் விளங்க நேரமெடுத்தாலும், சூழ்நிலையை பொருத்தி உணர்ந்து கொள்ள முடிகிறது .

உலகம் எப்படி வியாபாரமயமாகி, மனித உணர்வுகள் மலிந்துள்ளது , சில மனிதர்களின் தோற்ற விகாரங்களினும் பெரிதாய், உடல்வலிவுடைய ஏனையோரின் உள்ளத்துள் உறங்கும் விகாரங்கள் எத்துணை !! பணம் பாதாளமும் தாண்டி செல்ல வைக்கும் என்றெல்லாம், முழக்கமிடாமல் தெளிவாய் சொல்கிறது.
விவரிக்கப்பட்டுள்ள மாந்தர்களை போன்று பலரை வாழ்வில் நாம் கடந்திருப்போம், ஆனால் அவர்கள் உருவாக்கியுள்ள கொடூர உலகத்தை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
வியாபாரத்தில் இங்கே கடவுளரையும் பக்தர்கள் சும்மா விடுவதில்லை. உடல் குறையுள்ள மனிதருக்கு உள்ள உணர்வுகள், நியதி, அவர்களின் மன்னர்களுக்கு இருப்பதில்லை.இப்படி நாம் தெரிந்துகொள்ள விரும்பாத பல எதார்த்தங்களை உள்ளடக்கியதே இந்த ஏழாம் உலகம்.
வாசித்தபின் நம் பார்வைகள் இனி மாறும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை!
To buy from Amazon, please click the link

💯♥️
அற்புதமான பதிவு ❤️👍🏾