இக்கிகய் - ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ் . தமிழில் : PSV குமாரசாமி
- lakshmimandaleenag
- Oct 18, 2021
- 1 min read
Updated: Dec 14, 2021
கச்சிதமற்ற, முழுமையற்ற நிலையற்ற விஷயங்கள்தாம் அழகானவை. ஏனெனில் அவைதான் இயற்கையை அப்படியே பிரதிபலிக்கின்றன.
எதார்த்தமும் ஆழமும் நிறைந்த அழகான வரிகள் இவை.
ஜப்பானியர்களைப் பொறுத்த வரை எல்லா மனிதர்களிடமும் ஒரு இக்கிகய் இருக்கிறது. அதாவது அவர்கள் வாழ்வின் நோக்கம் தான் அது. ஜப்பானின் ஒக்கினாவா தீவிலுள்ள மக்களின், நீண்ட வாழ்நாளின் ரகசியம் அவர்கள் தங்கள் இக்கிகய் அறிந்து வைத்திருப்பதும்தான் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் தங்கள் வாழ்வின் நோக்கமாக கொண்டிருக்கும் செயல்களில், முதுமை வரை தொடர்ந்து, தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர் . அதோடு மன அழுத்தம் இல்லாத ஆசுவாச வாழ்க்கை முறையை கொண்டுள்ளனர்.
ஆனால் நாம் இக்கிகய் அறிவதெப்படி ! இந்த புத்தகம் அதற்கு சில வழிகளை கூறுகிறது. சிறந்த வாழ்க்கைமுறையையும் நல்ல கருத்து மாற்றங்களையும் நம்முள் விதைக்கும் நல்ல புத்தகம்.
இப்புத்தகத்தின் சில சிறந்த வரிகள் இதோ ...
மனிதர்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்து விட முடியும் - ஒன்றே ஒன்றைத் தவிர ! புறச்சூழல் எதுவாக இருந்தாலும் தன்னுடைய சொந்த மனப்போக்கையும் சொந்த வழியையும் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம்தான் அது .
நீங்கள் ஒருவர்மீது கடும் கோபம் அடைந்திருந்து அவரை நையப் புடைக்க விரும்பினால் அது குறித்துச் சிந்திக்க மூன்று நாட்களை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று நாட்களின் முடிவில் அவரோடு மல்லுக்கு நிற்க வேண்டும் என்ற விருப்பம் பிசுபிசுத்து போயிருக்கும்.
மகிழ்ச்சி என்பது செயல்முறையில் தான் அடங்கியுள்ளதே அன்றி, விளைவுகளில் அல்ல .
இந்த வாழ்வில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்பினால், அதற்கு நீங்கள் செய்வதற்கு ஏதாவது ஒன்று இருக்க வேண்டும், நீங்கள் நேசிப்பதற்கு ஒருவர் இருக்க வேண்டும், நீங்கள் நம்புவதற்கு ஏதாவதுஒன்று இருக்க வேண்டும்.
கச்சிதமற்ற, முழுமையற்ற நிலையற்ற விஷயங்கள்தாம் அழகானவை. ஏனெனில் அவைதான் இயற்கையை அப்படியே பிரதிபலிக்கின்றன.
காலத்தின் ஓட்டம், நம்மைச் சுற்றியிருக்கும் பொருட்களின் நிலையாமை போன்ற சில விஷயங்கள் மீது நமக்கு கட்டுப்பாடு இல்லை, என்பதை ஏற்று கொள்வதுதான் இங்கு முக்கியம்.
To buy from Amazon,
English : https://amzn.to/3lMZHtv
Tamil : https://amzn.to/3DSEepq

Comments